மரண முகாமில் தஞ்சமடைந்த மகிந்த
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மட்டக்களப்பு மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான வியாழேந்திரன்,பிள்ளையானின் ஆதரவுடன் பாதுகாப்பான இடத்தில் தங்கியிருக்க வாய்ப்புள்ளதாக அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது குடும்பத்துடன் திருகோணமலை இராணுவ முகாமில் பதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவர்கள் இன்றிரவு கடல் மார்க்கமாக நாட்டை விட்டு வெளியேற உள்ளதாகவும், ஜெட் விமானம் ஒன்றின் மூலம் நாட்டை விட்டு வெளியேற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பில் மக்கள் வெளியிட்ட பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் மகிந்த குடும்பம் வெளிநாடு ஒன்றுக்கு தப்பிச் செல்லும் முன்னாயத்தங்களை மேற்கொண்டு வருவதாக வெளிவரும் நிலையில்,இவர்கள் தற்போது வியாழேந்திரன்,பிள்ளையானின் ஆதரவுடன் மட்டக்களப்பு பகுதியில் இருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.