அகற்றப்படும் மஹிந்தவின் தளபாடங்கள்! பிரதமர் பதவியை கைவிடுகிறாரா?
இலங்கையில் ராஜபக்ஷ அரசாங்கத்தை பதவி விலக கோரி நாட்டு மக்கள் 3 மூன்று வாரங்களுக்கு மேலாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை மஹிந்த பிரதமர் பதவி விலகும் பட்சத்தில் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருதாக அறியமுடிகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மஹிந்த பிரதமர் பதவியில் இருந்து விலகுவாரா? விலகமாட்டாரா? என்ற கேள்வியே அதிக அளவில் பேசப்பட்டு வருகின்றது.
இவ்வாறான நிலையில் மகிந்தவின் காரியாலய ஆவணங்கள் மற்றும் தளபாடங்கள் அகற்றப்படுவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளதாக அரசியல் அவதானி ஜுவன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் விரைவில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து விலகிவிடுவார் என தெரியவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.