மகிந்த வருவார்....... பேச மாட்டார்....! பரபரப்பாகும் தென்னிலங்கை அரசியல்
ஸ்ரீலங்கை பொதுஜன பெரமுனவினால் எதிர்வரும் 12 ஆம் திகதி அநுராதபுர நகரில் நடத்தப்படவுள்ள மக்கள் பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்துகொள்ளவுள்ளதாகக் கட்சியின் செயற்பாட்டுத் தலைவர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எனினும், அவர் மக்களுடன் உரையாற்றுவதற்காகப் பிரதான மேடையில் ஏற மாட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேடைக்கு முன்னால் மக்களிடையே அல்லது வேறு இடத்தில் அமர்ந்து பேரணியில் கலந்துகொள்ளத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மக்கள் பேரணி 12 ஆம் திகதி உறுதியாக நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
இலஞ்ச ஊழல் ஆணையத்தால் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையால் ஸ்ரீலங்கை பொதுஜன பெரமுன இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.