பிரதமர் ரணிலை தெறிக்க விட்ட மஹேல
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜெயவர்தன நேற்று நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கிரிக்கட் தொடர்பான உதாரணத்தை விமர்சித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிரபல இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் வில்லியம் கில்பர்ட் கிரேஸை மேற்கோள் காட்டி, இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார்.
"ஒரு போட்டியின் போது, WG கிரேஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார், மேலும் ஸ்டம்புகள் தரையில் விழுந்தன. கிரிக்கெட் வீரர் ஸ்டம்புகளை எடுத்து அவற்றை மாற்றியிருந்தார்.
அப்போது நடுவர் அவரிடம், இல்லை, இல்லை, நீங்கள் அவுட் ஆகிவிட்டீர்கள். அந்நிலையில் அதற்கு பதிலளித்த டபிள்யூ.ஜி. கிரேஸ், இல்லை முட்டாள், அவர்கள் என்னை பேட்டிங் செய்வதைப் பார்க்க வந்தார்கள், உங்களை நடுவரைப் பார்க்க அல்ல என்று கூறினார், ”என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.
Just to remind you that your not WG Grace and not sure if the SL public wanna see you or the other failed batsman bat again..?? https://t.co/zySJfRYi1F
— Mahela Jayawardena (@MahelaJay) June 7, 2022
இதன்போது அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு அண்மையில் விதிக்கப்பட்ட தண்டனை தொடர்பில் கருத்து வேறுபாடு காரணமாக கதையை வெளியிட்ட பிரதமர், சில தீர்மானங்களை எடுப்பதற்கு சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளதாக சுட்டிக்காட்டினார்.
எனினும், பிரதமருக்கு பதிலளித்த இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் மஹேல ஜயவர்தன, “நீங்கள் WG கிரேஸ் அல்ல என்பதை உங்களுக்கு நினைவூட்டுவதற்காகவே” என தெரிவித்தார்.
"இலங்கை பொதுமக்கள் உங்களை அல்லது மற்ற தோல்வியுற்ற பேட்ஸ்மேன் மீண்டும் பேட் செய்வதைப் பார்க்க விரும்புகிறார்களா என்பது உறுதியாகத் தெரியவில்லை," என்று அவர் மேலும் கூறினார்.