இன்றுடன் நிறைவுபெறும் மகா கும்பமேளா : 68 கோடி பக்தர்கள் புனித நீராடினர்
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 நதிகள் ஒன்று கூடும் இடமான திரிவேணி சங்கமத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகா கும்பமேளா இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது.
மாகா கும்பமேளா
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கடந்த மாதம் 13 ம் திகதி பௌர்ணமி தினத்தன்று தொடங்கப்பட்ட மாகா கும்பமேளா 45 நாட்களாக எந்தவித பெரிய அசம்பாவிதம் இன்றி இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது.
இதுவரையில் சுமார் 68 கோடி பக்தர்கள் மகா கும்பமேளாவில் புனித நீராடி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இனி 2169ம் ஆண்டுதான் மகா கும்பமேளா நடைபெறும் என கணிக்கப்பட்டள்ளது.
இந்த மகா கும்பமேளாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும், கிரிக்கெட் வீரர்கள், திரை பிரபலங்களும் நீராடியிருந்தமை குறிப்பிடதக்கது.