இரண்டு வாரங்களிற்கு முன்னர் மாயமான சிறுமி உயிருடன் மீட்பு!
அவுஸ்திரேலியாவில் கடந்த இரண்டு வாரங்களிற்கு முன்னர் காணாமல்போன நான்கு வயது சிறுமி உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இரண்டு வாரங்களிற்கு முன்னர் பெற்றோருடன் சுற்றுலா சென்றவேளை காணாமல்போன நான்கு வயது சிறுமியான கிளியோ என்பவரே இவ்வாறு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
பேர்த்திலிருந்து 900 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கர்னோர்வனில் மூடியிருந்த வீட்டினை உடைத்து திறந்த காவல்துறையினர் சிறுமியை மீட்டுள்ளனர். காவல்துறையை சேர்ந்த ஒருவர் குழந்தையை கையிலெடுத்து என்ன பெயர் என கேட்டார் சிறுமி கிளியோ என தெரிவித்தார் என காவல்துறை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர் சிறுமியை பொலிசார் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
தனது வாழ்க்கையின் மிகச்சிறந்த தருணம் நான்கு வயது கிளியோ ஸ்மித்தை கண்டுபிடித்தது என சிறுமியை கண்டுபிடித்த அதிகாரி நெகிழ்ச்சியுடன் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை சிறுமி காணாமல்போனதை அடுத்து சிறுமியை கண்டுபிடித்து கொடுப்போருக்கு பெரும்தொகை பணம் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது .

