சித்திரை திருவிழாவில் உச்சி முதல் பாதம் வரை ஒளிர்ந்த மதுரை மீனாட்சி; வியக்கவைத்த ஆபரணங்கள்!
மதுரை மீனாட்சி அம்மன் மீது கொண்ட பக்தியின் காரணமாக பாண்டிய மன்னர்கள், வெளிநாட்டினர், பக்தர்கள் அள்ளிக் கொடுத்த முத்துக்கள் பதித்த தங்க, வைர, வைடூரிய நகை குவியல்கள் ஏராளமாக உள்ளன.
இந்த நகைகள் திருவிழாக்களின் போது முக்கியமாக 12 நாள் சித்திரை திருவிழா உற்சவங்களில் அம்மன், சுவாமிக்கு அணிவிக்கப்படுகிறது. அம்மனின் இந்த அலங்காரத்தை காண கோடி கண்கள் வேண்டும்.

மீனாட்சி அம்மனின் நகைகள் மீனாட்சி அம்மன் அணிந்திருக்கும் ஆபரணங்கள் அனைத்திலும் முத்து, மரகதகற்கள், வைரம், வைடூரியம், கோமேதகம், கெம்பு, பவளம், மாணிக்க கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.

பெரிய முத்து மேற்கட்டி இதில் இருதலையாளி, கிளி, புலி, பறவைகள், தாமரைப்பூ, சூரிய காந்தியின் உருவங்கள் 71,755 முத்துக்கள் பதிந்துள்ளன. முத்து உச்சிக் கொண்டை, முத்து மாம்பழக் கொண்டை, முத்தங்கிகள், முத்து மாலைகள். முத்துக் கடிவாளம் ஆகிய முத்தாரங்கள்.
அம்மனின் பட்டாபிஷேக கிரீடம்,
மீனாட்சி அம்மன் கையில் பிடித்திருக்கும் ஒற்றைக்கிளி பெரிய முத்துக்களால் ஆனது.
பட்டாபிஷேக கிரீடம்,
இதன் எடை 134 தோலா. 920 மாணிக்கம், 78 பலச்ச வைரம், 11 மரகதம், 7 நீலம், 8 கோமேதகம் பகிக்கப்பெற்றது.

வைர கிரீடம்,
வைர கிரீடம் 3 ஆயிரத்து 500 கிராம் எடையுள்ளது. இதில் வெளிநாட்டில் பட்டை தீட்டப்பட்ட 399 காரட் எடையுள்ள முதல் தரமான 3 ஆயிரத்து 345 வைர கற்களும், 600 காரட் எடையுள்ள 4 ஆயிரத்து 100 சிவப்பு கற்களும் பதிக்கப்பட்டுள்ளன.
இது தவிர எட்டரை காரட் எடையுள்ள ஒரு மரகத கல்லும், அதே எடையில் ஒரு மாணிக்க கல்லும் பொருத்தப்பட்டுள்ளன. கிரீடத்தின் உயரம் பதிநான்கரை அங்குலம். அதன் அடிப்பகுதி சுற்றளவு 20 அங்குலம். சிற்ப சாஸ்திர முறைப்படி அமைந்தது.
ரத்தின செங்கோல்,
பட்டாபிஷேகத்தின் போது அம்மன் கையில் வைத்திருந்த ரத்தின செங்கோல், இதன் எடை 67 தோலா. இதில் 761 சிவப்பு கற்கள், 21 பலச்ச வைரங்கள், 269 மரகதம், 44 முத்துக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

வாசுமாரை கிரீடம்,
தலைப்பாகை கிரீடம். அம்மன் தங்க கவசம் 7 ஆயிரம் கிராம் எடையுள்ளது. நீல நாயக பதக்கம், நீலநாயக பதக்கம் மன்னர் திருமலை நாயக்கமன்னர் அளித்தது. ஆபரணங்களில் இதுவே மிக அற்புதமானது. எந்த பக்கம் பார்த்தாலும் பளபளப்பும், ஒளியும் ஊடுறுவி பளிச்சிடும்.
இதன் எடை 21 தோலா. இதில் 10 பெரிய நீல கற்கள், 2 கெம்பு, 1 கோமேதம் பதிந்துள்ளது. தங்க காசுமாலை, பெரிய அளவில் 2 வாகன பதக்கங்கள். ரோமானிய காசுமாலை. இதில் தங்க ரோமன் 48 காசுகள் 50 தங்க மணிகளுடன் கோர்க்கப்பட்டுள்ளன.
இதேபோல் வெளிநாட்டினர் கொடுத்த காசுமாலை. கிழக்கத்திய கம்பெனி வழங்கிய 73 தங்ககாசுகளுடன் கூடிய காசுமாலை உள்ளது.
இடுப்பில் கட்டும் நாகர் ஒட்டியாணம். இதில் 113 மாணிக்க கற்கள், 28 பலச்ச வைரம், 8 மரகத கற்கள், 66 முத்துக்கள் பதித்தது. இதன் எடை 33 தோலா.

தங்க மிதியடிகள்,
அம்மனின் திருவருடிகள் தாங்கும் தங்க மிதியடிகள். தங்க மிதியடிகள் ஒன்றின் எடை 27 தோலா. 211 சிவப்பு கற்கள், 36 மரகத கற்கள், 40 பலச்ச வைரம், 2 முத்து, 2 நீலம், 2 வைடூரியம் பதிக்கப்பட்டுள்ளது.
மற்றொன்றின் எடை 28 தோலா. 211 சிவப்பு கற்கள், 40 பலச்ச வைரம், 36 மரகத கற்கள், 2 நீலம், 2 முத்து, 2 வைடூரியம் பதிக்கப்பெற்றது. மீனாட்சி அம்மனின் இந்த விவரங்கள் அனைத்தும் 1974ல் நடைபெற்ற குடகுழுக்கு விழா மலரில் இடம் பெற்றுள்ளன.
மதுரையை ஆளும் மீனாட்சி அம்மனை பார்பவர்களின் கண்கள் கூசும் அளவிற்கு அன்னையவள் சிதிரை மாத திருவிழாவில் உச்சி முதல் பாதம் வரை அலகாரத்துடன் நிற்கும் அற்புத காட்சியை காண பலகோடி கண்கள் வேண்டும்.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        