பங்குனி திங்கள் ஆரம்பம்; மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மனில் குவிந்த பக்தர்கள்!
பங்குனி திங்கள் சிறப்பை முன்னிட்டு வரலாற்று பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் ஆலயத்தில் பங்குனித்திங்கள் உற்சவம் இன்று(18) காலை இடம்பெற்றது.
பங்குனி 18 இன்றையதினம் தமிழ் மாத்த்தின் முதலாவது பங்குனி திங்கள் ஆகும். ஈழத்தில் அமைந்துள்ள அமைந்துள்ள ஆலங்கள் ஒவ்வொன்றிற்கு ஒவ்வொரு விசேடம் உண்டு.
அந்தவகையில் பங்குனி திங்கள் என்றாலே மட்டுவில் ப்ன்றித்தலைச்சி அம்மன் தான் அனைவரின் நினைவுக்கும் வரும். அங்குனி திங்கள் கிழமையில் யாழ்மாவட்டத்தில் உள்ள மக்கள் மட்டுமன்றி பிறமாவட்டத்து மக்களும் வந்து அம்மனுக்கு பொங்கல் வைத்தி வழிபாடு நடத்துவார்கள்.
இன்றைய தினமும் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மனுக்கு பொங்கல் பூஜை செய்து வழிபாடுகளில் ஈடுபட்டனர். இன்றைய முதலாவது பங்குனித்திங்கள் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
அதேவேளை இவ்வருடம் 18-03-2024, 25-03-2024, 01-4-2024, 08-04-2024 ஆகிய நான்கு திங்கள்கிழமைகளில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது .