வழி நடத்த தலைவர் இல்லை: இலங்கையில் எப்படி இந்த அற்புதங்கள் நிகழ்கிறது!
யுத்தத்தில் உயிர் நீத்த மாவீரர்களை நினைவுகூர்வதற்குத் தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் தமிழ் உறவுகள் ஓன்று திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதன்போது, மாலை 6 மணி முதல் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு உட்பட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான உறவுகள் ஒன்று திரண்டு மாவீரர்களுக்கு உணவெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இவ்வாறான நிலையில்,
வழி நடத்த தலைவர் இல்லை. பற்றிப்பிடிக்க ஒரு அமைப்பு இல்லை. ஆனாலும் எப்படி இந்த அற்புதங்கள் நிகழ்கிறது?
எரிந்த சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவை என்பார்கள். அது உண்மையா இல்லையா என்று தெரியாது.
ஆனால் இரண்டு நாளில் 40 ஆயிரம் மக்களை கொன்று குவித்த பின்பும் அதில் இருந்து இவர்களால் எழுந்து நிற்க முடிகிறது.
ஆம், தமிழ் இனம் “ஆசியாவின் அதிசயம்” என்பது மிகையல்ல. என குறித்த சிறப்பான பதிவை முகநூலில் தோழர் பாலன் அவர்கள் பதிவிட்டுள்ளார்.