400 பேருடன் இலங்கை வந்தடைந்த அதி சொகுசு கப்பல்
ரிட்ஸ் கார்ல்டன் (Ritz Carlton) வலையமைப்பிற்குச் சொந்தமான அதி சொகுசு கப்பல் ஒன்று, 400 பேருடன் இன்று (14) கொழும்பு துறைமுகத்தின் பயணிகள் கப்பல் தளத்தை வந்தடைந்துள்ளது.
இலங்கையின் சுற்றுலாத்துறை ஒருவித சவாலை எதிர்கொண்டிருந்த பின்னணியில், இவ்வாறானதொரு பாரிய பயணிகள் கப்பல் நாட்டிற்கு வருகை தந்துள்ளமை சுற்றுலாத்துறைக்கு பெரும் உத்வேகம் அளிப்பதாக, இதன்போது கருத்து தெரிவித்த சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க கூறினார்.

சுற்றுலாத்துறை
இந்நிகழ்வில் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க, சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபையின் தலைவர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இரண்டு நாட்களுக்கு இக்கப்பல் இலங்கையில் நங்கூரமிடப்பட்டிருக்கும் அதேவேளை, நாளை காலிக்குச் செல்லவுள்ளது.
இங்கு கப்பலின் ஊழியர்களுடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்ட அமைச்சர், கப்பலைப் பார்வையிடுவதிலும் இணைந்துகொண்டார். இதன்போது நினைவுச் சின்னங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.