குருணாகலில் கடத்தப்பட்ட சொகுசு கார் கண்டுபிடிப்பு!
கொகரெல்ல பகுதியில் வீடு ஒன்றில் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கடத்தப்பட்ட சுமார் 9 மில்லியன் ரூபா பெறுமதியான சொகுசு கார் மாலபே பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குருணாகல், கொகரெல்ல பகுதியில் கடந்த 2 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரது வீட்டில் கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த காரை திருட வந்த சந்தேக நபர்களின் ஜீப் வாகனும் அவர்கள் வசமிருந்த கைத் துப்பாக்கி ஒன்றும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பொலிஸ் உத்தியோகத்தர்கள் என கூறிக்கொண்டு பலவந்தமாக வீட்டுக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி கொள்ளை கும்பல் காரை கொள்ளையடித்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.