திருகோணமலையிலிருந்து வந்த சொகுசு பேருந்து தீக்கிரை
சாரதியும் உதவியாளரும் காயங்களின்றி உயிர் தப்பினர் திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் சொகுசுப் பேருந்து ஒன்று இன்று (11.10.2026) அதிகாலை தீப்பற்றி முற்றாக எரிந்து சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஹபரண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜக்கா பங்குவ பகுதியை அண்மித்த 144ஆம் கட்டைப் பகுதியில், அதிகாலை சுமார் 3 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திருகோணமலைக்கு வருகை தரவிருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கொழும்பிலிருந்து ஏற்றிவருவதற்காகச் சென்றுகொண்டிருந்தபோதே பேருந்து தீப்பற்றியுள்ளது.
சம்பவத்தின்போது பேருந்தில் இருந்த சாரதியும் உதவியாளரும் எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பியுள்ளனர்.
தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்த தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை.