மாமனாருக்கு மருமகன் நிகழ்த்திய கொடூரம் ; இலங்கையில் பரபரப்பை கிளப்பிய சம்பவம்
நிட்டம்புவ - தங்கொல்லவத்த பகுதியில், வயோதிபர் ஒருவர் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபருக்கும் அவரது மருமகனுக்கும் (மகளின் கணவர்) இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றிய நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணை
நேற்று (10) மாலையில் இடம்பெற்ற இந்த தாக்குதலில் படுகாயமடைந்த நபர், வத்துப்பிட்டிவல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் மேல் தங்கொல்லவத்தை பகுதியைச் சேர்ந்த 70 வயதுடையவரே கொல்லப்பட்டுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குற்றச் சம்பவத்தைத் தொடர்ந்து தலைமறைவான 26 வயதுடைய சந்தேக நபரைக் கைது செய்வதற்காக நிட்டம்புவ நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.