கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற அதிசொகுசு பேருந்து விபத்து
இன்று அதிகாலை (18) கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அதிசொகுசு பேரூந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
பளையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பனங்கொட்டுக்களை ஏற்றிக்கொண்டு பயணித்த Landmaster உடன் பேருந்து மோதியது.
5 பேர் காயம்
இவ் விபத்து, A9 வீதியில் அமைந்துள்ள கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் 5 பேர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 3 பேர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பேரூந்தில் பயணித்த சாரதி உதவியார் உட்பட, Landmaster சாரதி மற்றும், உதவியாளர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.