மாடுகளைப் பாதிக்கும் லம்பி நோய்
நுவரெலியா மாவட்டத்தில் லம்பி தோல் நோய் எனும் ஒரு வகை பெரியம்மை நோய் மாடுகளைப் பாதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இந்த நோயானது மாடுகளின் உடல் முழுதும் சிறியது முதல் பெரியது வரையான வீக்கங்களை உருவாக்கி உள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த நோய் கடந்த முறையை விட மாறுபட்ட விதத்தில் சற்று வீரியத்துடன் மாடுகளைப் பாதிக்கத் தொடங்கியுள்ளதாகவும் கால்நடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் பொருளாதாரம் கணிசமான அளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். கடந்த நாட்களில் நுவரெலியா மாவட்டத்தில் காணப்பட்ட மழையுடனான காலநிலையின் பின்னர் நுளம்புகள் ஏனைய பூச்சிகளின் பெருக்கம் அதிகரிப்பு காரணமாக நோய் தீவிரமாகப் பரவலடைந்துள்ளதாக மிருக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த நோய் அதிகளவு பசு மாடுகளையும் குறைவான அளவில் எருமை மாடுகளையும் தாக்குகிறதாகவும் தெரிவித்துள்ளனர்.