லொட்டரியில் அடித்த அதிஷ்டம்...செய்வதறியாது திகைப்பில் ஆழ்ந்த பெண்
கனடா லொட்டரியில் அடித்த அதிஷ்டத்தால் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன கனடாவை சேர்ந்த சகிதா நாரயண்.
கனடாவின் எட்மண்டனை சேர்ந்த சகிதாவுக்கு லொட்டரியில் /49ல் $16,511,291.40 (ரூ 2,62,71,56,223.45) பரிசு விழுந்துள்ளது. இந்த நிகழ்வு குறித்த சகிதா கூறியதாவது, தன்னால் இதனை நம்ப முடியவில்லை.
மேலும் தான் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். மேலும் இந்த பரிசனது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார். பரிசு பணத்தை வைத்து என்ன செய்வதென்று திகைப்பில் ஆழ்ந்துள்ளார் சகிதா.
இருப்பினும் அவரது கனவாக வீட்டிலே சமையலறையை அமைக்க வேண்டும் என்பது தான் என்றும் மேலும் தனது இளைய மகளுக்கு கார் வாங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.