இலங்கையில் குறைந்த விலையில் மதுபானம்; குடிமகன்கள் மகிழ்ச்சி... மருத்துவர்கள் கவலை!
இலங்கையில் குறைந்த விலையில் மதுபானத்தை அறிமுகப்படுத்த மதுவரி திணைக்களம் சமீபத்தில் முடிவு எடுத்துள்ளது.
இந்தநிலையில், மதுவரி திணைக்களத்தின் முடிவு இலங்கை மனநல மருத்துவர்கள் கல்லூரி கவலை தெரிவித்துள்ளது.
நாட்டில் மதுவின் விலைகளைக் குறைப்பது இளம் பருவத்தினர் மதுவைப் பயன்படுத்தத் தொடங்குவதற்கான வாய்ப்பை உருவாக்கும்.
14 வயதிற்கு முன்பே மது அருந்தும் போக்கு
மதுவின் மலிவு விலையால் அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் அடிமையாக வழிவகுக்கும் என்று இலங்கை மனநல மருத்துவர்கள் கவலைகளை எழுப்பியுள்ளது.
அதேசமயம் சுகாதார பொருளாதாரம் குறித்த ஆய்வுகள், மதுவின் விலையை அதிகரிப்பதன் மூலம் மக்களிடையே மது பயன்பாட்டின் பரவலைக் குறைப்பது புற்றுநோய்களைத் தடுப்பதற்கான மிகவும் செலவு குறைந்த உத்தி என்பதைக் காட்டுகிறது.
மேலும், மது அருந்துதல் மோசமான மன ஆரோக்கியம், அதிகரித்த உளவியல் நோய் மற்றும் அதிக தற்கொலை விகிதங்களுடன் நேரடியாக தொடர்புப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை நாட்டில் ஒரு சமீபத்திய கணக்கெடுப்பில் இளம் பருவத்தினரிடையே மது அருந்தும் போக்கு அதிகரித்து வருவதாகவும், மது அருந்தியவர்களில் 39.3% பேர், 14 வயதிற்கு முன்பே, இளமைப் பருவத்தில் முதல் முறையாக மது அருந்த ஆரம்பித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளமை அதிட்=சீயை ஏற்படுத்தியுள்ளது.