குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்; இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை!
இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்தும் அதே பகுதியில் நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தாக்கத்தால், மேல், சபரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

அத்துடன் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படும் பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க, பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது