இதயங்களை வென்ற காதல்; லட்சத்திற்கும் மேலான லைக்குகளை அள்ளிய திருமணம்!
பாலிவுட் நடிகை பத்ரலேகாவின் (Bhadralekha) காதல், திருமணத்தில் முடிந்த நிலையில் அவர்களின் திருமண நிகழ்வு சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டு ஏராளமான பதிவுகளை வெளியிட்டு வருவதுடன் லட்சத்திற்கும் மேலான லைக்குகளையும் அள்ளியுள்ளது.
பாலிவுட் நடிகை பத்ரலேகா ராவ் (Bhadralekha), கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குனர் ஹன்சல் மேத்தாவின் 'சிட்டிலைட்ஸ்' திரைப்படம் மூலம் கதாநாயகன் ராஜ்குமார் ராவுடன் இணைந்து அறிமுகமானார். ராஜ்குமார் ராவ் அதற்கு முன்னதாகவே 2010ல் 'லவ் செக்ஸ் அவுர் தோக்கா' என்ற படத்தில் அறிமுகமாகி பிரபலமாகியிருந்தார்.
அப்போது பத்ரலேகா (Bhadralekha) விளம்பரப் படங்களில் மட்டுமே நடித்துகொண்டிருந்தார். ராஜ்குமார் ராவ் மற்றும் பத்ரலேகா (Bhadralekha) இருவரும் 11 வருட காதல் வாழ்க்கைக்குப் பிறகு நேற்று (நவம்பர் 15) திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் "ராஜ்குமார் ராவ் மற்றும் பத்ரலேகா பாலின் காலத்தால் அழியாத காதல் கதையைக் கொண்டாடுகிறோம்" என்ற வார்த்தைகளுடன் அவரது இடுகை தொடங்குகிறது,
பின்னர் பத்ரலேகாவின் (Bhadralekha) பார்வையில் இருந்து காதல் கதையை விவரிக்கிறது. “நான் அவரை முதன்முறையாக' LSD (லவ் செக்ஸ் அவுர் தோக்கா)இல் பார்த்தேன். அவர் வித்தியாசமான ஒரு இளைஞனாக நடித்திருந்தார்.
ஆனால் உண்மையில் அவர் எப்படிப்பட்டவர் என்று நான் நினைத்தேன். ஆனால் நான் பயந்திருந்ததைப் போல அவர் இல்லை என்று தோன்றியதில் மகிழ்ச்சியாக இருந்தது. இதில் இன்னொரு அற்புதமான விஷயம், சினிமாவுக்கு முன்னதாக ஒருவிளம்பரத்தில் என்னை அவர் ஒரு விளம்பரத்தில் பார்த்தபோது, இப்பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்ளப்போகிறேன் ராஜ்குமார் நினைத்தாராம்.' என்கிறார் பத்ரலேகா (Bhadralekha).
இந்நிலையில் இந்த பதிவு வெளியான ஒரு மணிநேரத்தில் சமூக வலைதளங்களில் 1.2 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை அள்ளியதுடன் ஷேர் செய்யப்பட்டபின்னர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கமென்ட்களைக் அப்பதிவு குவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

