உடல் எடையைக் குறைத்து அசத்தல் அழகில் காட்சியளிக்கும் லாஸ்லியா
இலங்கைப் பெண்ணான லாஸ்லியா தனது அடுத்த படத்திற்காக உடல் எடையைக் குறைத்துள்ளார்.
அந்த புகைப்படம் தற்போது றைகர்களிடம் வைரலாக பரவி வருகிறது. பிக் பாஸ் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய லாஸ்லியா அதன் மூலம் கிடைத்த பிரபலத்தின் வாயிலாக பல்வேறு விளம்பர படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் இந்தியா கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து " பிரண்ட்ஷிப்" எனும் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது தனது அடுத்த படத்தின் கதை தேவைக்காக தனது உடல் எடையை உடற்பயிற்சியின் மூலம் குறைத்து வந்தார் லாஸ்லியா.
அதுமட்டுமின்றி தனது உடல் எடை குறைந்த புகைப்படத்தை தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் லாஸ்லியா. அந்த புகைப்படத்தில் அசத்தல் அழகில் காட்சியளித்த லாஸ்லியா ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்துவிட்டார்.
