உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இதன் சாறுகளை அருந்துங்கள்
பழச்சாறுகள் பல நூற்றாண்டுகளாக ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான ஒரு வழியாக பயன்படுத்தப்படுகின்றன.
இருப்பினும் இவற்றை எடையை இழக்கவும் பயன்படுத்தலாம் என்பது பலருக்கு தெரிவதில்லை.
பழச்சாறுகளில் சில விசேட பொருட்களை சேர்த்து அவற்றின் மூலம் உடல் எடையை குறைக்க முடியும் என கூறப்படுகின்றது.
எடை இழப்புக்கு சாறு எவ்வாறு உதவும்?
பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக உட்கொள்வது மற்றும் அதன் சாறுகள் எடை இழப்புக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
பழங்கள் மற்றும் காய்கறிகளில் குறைந்த கலோரிகள் மற்றும் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஆகையால் இவை எடை இழப்புக்கு ஏதுவான உணவுகளாக அமைகின்றன.
பானமாக அருந்துவதால் நிறைவான உணர்வும் கிடைக்கின்றது. இது ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகமாக சாப்பிடுவதையும் தடுக்கிறது.
எடை இழப்பு சாறு
தேவையான பொருட்கள்
எடை இழப்புக்கான பானம் தயாரிக்கும் போது குறிப்பாக இதற்கான பிரத்யேகமான சில பொருட்களை நாம் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்.
கீரைகள்
கீரைகளில் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. இவற்றில் கலோரிகளின் அளவும் குறைவாக உள்ளது. கீரை எடை இழப்பு சாறு செய்ய ஏற்ற பொருளாக அமைகின்றது.
பாலக் கீரை, சிறு கீரை, வெந்தயக்கீரை ஆகிய கீரைகளின் சூப் செய்து குடிப்பது எடை இழப்பில் உதவும்.
வெள்ளரிக்காய்
எடை இழப்பு சாறுக்கு வெள்ளரி ஒரு சிறந்த மூலப்பொருளாகும். ஏனெனில் அதில் கலோரிகள் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் உள்ளன. அதாவது இந்த சாற்றை உட்கொண்டால், முழுமையான உணர்வுடன் நீரேற்றமாகவும் உணரலாம்.
இஞ்சி
இஞ்சி இயற்கையான வழியில் பசியை கட்டுப்படுத்துகிறது. இது எடை இழப்பு சாறுக்கு சிறந்த பொருளாக இருக்கும். இது உடலில் ஏற்படும் வீக்கத்தையும், வயிறு உப்பசத்தையும் குறைக்க உதவும். இஞ்சி உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
எலுமிச்சை
எலுமிச்சை இயற்கையாக உடலில் உள்ள நச்சுப்பொருட்களை நீக்கும் ஒரு பழமாகும். இது நச்சை நீக்கி உடலில் இருந்து அவற்றை வெளியேற்ற உதவுகின்றது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவி எடை இழப்புக்கு துணைபுரியும்.
ஆப்பிள்
ஆப்பிளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது வயிறு நிரம்பிய முழுமையான திருப்தியான உணர்வைத் தரும். இதில் கலோரிகள் குறைவாக உள்ளன. ஆப்பிள் சாறு எடை இழப்புக்கு எற்றதாக இருக்கும்.
.