உடல் எடை குறைய... காலையில் இந்த உணவுகளை சாப்பிடுங்க!
புரதம் நிறைந்த உணவுகள் உடலுக்கு மிகவும் முக்கியம். உடலின் வளர்சிதை மாற்றத்தில் புரதத்தின் பங்கு மிகவும் பெரியது. புரதம் என்பது நமது உடலின் உயிரணுக்களின் கட்டமைப்புப் பொருளாகும்.
நமது உடலின் எடையை குறைக்க முயற்சிக்கும்போது, புரதம் நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும். உடலில் தசைகள் உருவாக்கத்தில், புரதச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது.

ஒவ்வொருவரின் உடல் ரீதியான செயல்பாடுகளின் அளவைப் பொறுத்து, உட்கொள்ளக் கூடிய புரதத்தின் அளவு, ஒரு கிலோவிற்கு 1 முதல் 1.5 கிராம் வரை அதிகரிக்க வேண்டியது அவசியம் ஆகும்.
அந்தவகையில் புரோட்டீன் நிறைந்த காலை உணவோடு நமது நாளைத் தொடங்குவது உடலுக்கு ஆரோக்கியம் அளிப்பதுடன் , உடல் எடையைக் குறைக்கவும் புதர உணவுகள் உதவும்.
தினமும் நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய 5 முக்கிய புரத உணவுகள்:-
முட்டை: முட்டை அதிக அளவு ‘புரதச்சத்து’ நிறைந்த உணவாகும். வேகவைத்தல், ஆம்லெட் என முட்டையை பல விதமாக சமைக்கலாம். ‘முட்டைகள்’ உயர்தர முழுமையான புரதத்தின் சிறந்த ஆதாரங்களில் ஒன்றாகும்.

நம் உணவில் புரதச் சத்தை அதிகரிக்க முட்டை மிக அவசியம் ஆகும். இது உடலுக்குத் தேவையான வைட்டமின் டி, இரும்பு மற்றும் மெக்னீசியம் போன்ற பிற ஊட்டச்சத்துக்களுடன் நிரம்பியுள்ளது.
ஓட்ஸ்: காலையில் சாப்பிடுவதற்கு ‘ஓட்ஸ்’ மிகச் சிறந்த உணவாகும். ஒரு டீஸ்பூன் வெண்ணெய், மற்றும் சில பழங்களுடன் சேர்த்து, ஓட்ஸ் சாப்பிடுவதால் உடல் எடையை குறைக்கலாம். புரதம் மற்றும் நார்ச்சத்து, தாமிரம், இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற பிற ஊட்டச்சத்துக்களை தருகிறது.

இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், குளிர்காலத்தில் சளி மற்றும் இருமல் வராமல் தடுக்கவும் உதவுகிறது.
சியா விதைகள்: சின்னஞ்சிறிய சியா விதைகளில் புரதம் நிறைந்துள்ளது. காலையில் ஒரு கிண்ணம் சியா விதைகள், சில நட்ஸ்கள் மற்றும் பழங்கள் போன்றவற்றை கலந்து சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது.

இவை ஒரு நாள் முழுவதுக்குமான திருப்திகரமான ஓர் உணர்வை தரும். சில சியா விதைகளை இரவில் பாலில் ஊறவைத்துவிட்டு, காலையில் சாப்பிடலாம். சியா விதைகள் இதய நோய்களின் அபாயத்தைக் குறைப்பதோடு, மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவுகிறது.

பாசிபருப்பு: காலை உணவாக பாசிபருப்பு பயன்படுத்தி செய்யப்படும் ‘மூங் தால் சில்லாவை’ சாப்பிடலாம். இதில் வைட்டமின் ஏ, பி, சி, டி, ஈ, புரதம், நார்ச்சத்து, இரும்பு, மெக்னீசியம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

அவல்: ‘அவல்’ ஒரு நல்ல காலை சிற்றுண்டி ஆகும். இதனுடன் சிறிது வேர்க்கடலை சேர்த்து சாப்பிடலாம். இது மட்டுமில்லாமல், அவல் உடன் சிறிது பட்டாணி, வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் காலிஃபிளவர் சேர்த்தும் சாப்பிடலாம். மதியம் கூட இதனை எடுத்துக்கொள்ளலாம்.
குறித்த 5 புரத உணவுகளை அன்றாடம் நாம் காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் எடையை குறைக்கலாம்.