இளைஞனை பலியெடுத்த இரு லொறிகள் ; விசாரணைகள் ஆரம்பம்
குருணாகல் - தம்புள்ளை வீதியில் தம்படவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக தொரட்டியாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (22) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
ஒன்றுடன் ஒன்று மோதிய லொறிகள்
தம்புள்ளையிலிருந்து குருணாகல் நோக்கிப் பயணித்த லொறி ஒன்று குருணாகலில் இருந்து தம்புள்ளை நோக்கிப் பயணித்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது, தம்புள்ளையிலிருந்து குருணாகல் நோக்கிப் பயணித்த லொறியில் இருந்த இளைஞன் ஒருவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் யட்டிகல்பொத்த, கலேவெல பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஆவார்.
இந்த விபத்தில் மூவர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தொரட்டியாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.