இத்தாலி செல்லும் முன்னர் மஹிந்த – கோட்டாபய – பஷில் அவசர சந்திப்பு..!
பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ இன்று இத்தாலிக்கு செnறுள்ள நிலையில் நேற்று இரவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவுடன் நீண்ட நேரம் பேச்சு நடத்தியதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சந்திப்பில் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்க்ஷவும் கலந்து கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்க்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் அவர் அதில் பங்கேற்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.
ஜனாதிபதி தலைமையில் நடந்த இந்த சந்திப்பில் பல முடிவுகள் எடுக்கப்பட்டதாக மேலும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று காலை இத்தாலிக்குச் சென்றுள்ளனர்.
போலோக்னா பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ள சர்வதேச மாநாட்டில் தலைமை உரை நிகழ்த்துதல் மற்றும் இராஜதந்திர சந்திப்புகளை அடிப்படையாகக் கொண்டே பிரதமரின் இத்தாலி விஜயம் திட்டமிடப்பட்டுள்ளது.