சி.ஐ.டியில் நீண்ட வரிசை!
புதிய வரித்திருத்தங்கள் ஊடாக சிறிய, நடுத்தர தொழிலாளர்கள், தேசிய வர்த்தகத்துறையினர், முதலீட்டு நிறுவனங்கள் உள்ளிட்டப் பலருக்கு அரசாங்கம் மரண அடியை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசிம் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
நிதி மோசடிக் குற்றச்சாட்டு
நிதி மோசடிக் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள திலினி யார் என தெரியாது. அவரிடம் எந்தவொரு கொடுக்கல் வாங்கல்களையும் மேற்கொண்டதில்லை எனவும் அவர் கூறினார்.
எனினும் திலினியிடம் பணம் வழங்கியவர்களின் பட்டியலில் எனது பெயரும் இருக்கிறது.
ஆனால் ஏனையோர் போல நான் இது தொடர்பில் சி.ஐ.டியில் முறைப்பாடு செய்யப்போவதில்லை என தெரிவித்த அவர், சி.ஐ.டியிலும் நீண்ட வரிசைகள் தற்போது காணப்படுவதாகவும் தெரிவித்தார்.