லொஹான் ரத்வத்தை நாட்டுக்கு முன்மாதிரி; விமல் புகழாரம்!
லொஹான் ரத்வத்தை நாட்டிற்கு ஒரு முக்கியமான முன்மாதிரி என்றும் ஆபரணங்களைக் கொள்ளையடிக்க அவர் சென்றிருந்தால் அந்த அமைச்சுப் பதவியையும் அவர் ராஜினாமா செய்வார் என்றும் கைத்தொழில் துறை அமைச்சருமான விமல் வீரவன்ச கூறியுள்ளார்.
லொஹான் ரத்வத்தை தனது அமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்தமை நாட்டின் அரசியல் கலாசாரத்திற்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளதாகவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
தவறுகள் நடக்கலாம். ஆனால் அந்தத் தவறுகளை ஒப்புக்கொண்டு பணிவுடன் இராஜினாமா செய்வது முக்கியம். இது போன்ற முன்மாதிரியான சம்பவங்கள் நம் நாட்டின் அரசியல் கலாசாரத்தில் இடம்பெற்ற தில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அந்த வகையில், லொஹான் ரத்வத்தை தம்மால் ஏற்பட்ட ஏதேனும் குறைபாடுகள் இருப்பதை ஏற்றுக்கொண்டு அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளார் என்றும், ரத்வத்தை ஆபரணங்களைக் கொள்ளையடிக்கச் சென்றால் அவர் அந்த அமைச்சுப் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்து விடுவார் எனவும் விமல் தெரிவித்துள்ளார்.
ரத்வத்தை சிறைச்சாலை அமைச்சர் பதவியிலிருந்து மாத்திரம் விலகியுள்ளதாகவும், இரத்தினக்கல் மற்றும் ஆபரண அமைச்சர் பதவியில் அவர் தொடர்ந்து நீடிப்பது குறித்து ஊடகங்கள் வினவியபோதே விமல் வீரவன்ச மேற்கண்டவாறு கூறினார்.