உள்ளூராட்சி மன்ற சபைத் தேர்தல் ஏப்ரல் 24 ஆம் திகதி நடைபெறாதா?
உள்ளூராட்சி மன்ற சபைத் தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதி நடத்தப்படுவதற்கான சாத்தியம் குறைவாகவே காணப்படுவதாக பெப்ரல் எனப்படும் தேர்தல்களுக்கான மக்கள் நடவடிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த விடயத்தில் அரசாங்கம் நீதிமன்ற முடிவுகளை புறக்கணிப்பது வருந்தத்தக்கது என்று பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் மக்களின் உரிமையை பறிக்கும் என்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை எனவும் இருப்பினும், நீதிமன்ற முடிவுகளைக் கூட புறக்கணிக்கும் நிலைமைக்கு அரசாங்கம் வந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக நாடாளுமன்றம், நிர்வாகம் மற்றும் நீதித்துறை ஆகிய மூன்று தூண்களிடையே சமநிலை இப்போது முழுமையான குழப்பத்தில் உள்ளது என்று ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.