லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!
நாடு முழுவதும் எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்தியுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாட்டின் பல பாகங்களிலும், கடந்த 24 மணி நேர காலப்பகுதியில் சுமார் 20 சமையல் எரிவாயு தொடர்பான வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலை இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக லிட்ரோ நிறுவனம் தற்போது விநியோகத்தை இடைநிறுத்தியதாக அறிவித்துள்ளது.
மறு அறிவித்தல் வரை இவ்வாறு எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்தி உள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் எரிவாயு வெடிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பில் முறைப்பாடுகளை அறிவிக்க மக்குளுக்கு இரண்டு விசேட தொலைப்பேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
எரிவாயு தொடர்பான பிரச்சினைகளை0115811927 மற்றும் 0115811929 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தெரிவிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதனை எரிவாயு தொடர்பான பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வுகளை வழங்குவதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட எட்டு பேர் கொண்ட குழுவின் தலைவரான பேராசிரியர் சாண்டா வல்பெலேஜ் தெரிவித்தார்.