சட்டவிரோத வாகனங்களைப் பயன்படுத்திய அமைச்சர்களின் பெயர் பட்டியல் ; சிக்கவுள்ள பெரும் தலைகள்
வாகனங்களை இறக்குமதி செய்து அவற்றைப் பதிவுசெய்யாமல் பயன்படுத்திய முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களது பட்டியலொன்றை விரைவில் வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கந்தளாய் நகரில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோத வாகனங்கள்
கடந்த காலங்களில் வாகன இறக்குமதி தடைசெய்யப்பட்டிருந்த போதிலும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் வாகனங்களைக் கொண்டுவந்துள்ளனர்.
அவர்கள் அத்தகைய வாகனங்களைப் பதிவுசெய்யாமல் பயன்படுத்தினர். அவ்வாறு சட்டவிரோதமாக வாகனங்களைப் பயன்படுத்திய சிலர் விரைவில் கைதுசெய்யப்படவுள்ளனர். அவ்வாறானவர்களின் பெயர்கள் அடங்கிய நீண்ட பட்டியல் உள்ளது.
இது அரசியல் பழிவாங்கல் அல்ல, நாம் சட்டத்தை முறையாக செயற்படுத்துகிறோம் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.