7 மாவட்டங்களுக்கு மின்னல் அபாய எச்சரிக்கை
நாட்டில் பெய்து வரும் கன மழை காரணமாக 7 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் தாக்க அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூரியுள்ளது.
இதன்படி மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் கலி, மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் கடுமையான மின்னல் தாக்கங்களுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வெளியிலோ , மரங்களுக்கு அடியிலோ நிற்க வேண்டாம்
இந்த எச்சரிக்கை சனிக்கிழமை (06) இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனை கருத்திற்கொண்டு பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மின்னல் மற்றும் இடி ஏற்படும் சந்தர்ப்பங்களில் திறந்த வெளியிலோ அல்லது மரங்களுக்கு அடியிலோ நிற்க வேண்டாம் எனவும், பாதுகாப்பான கட்டடம் அல்லது வாகனத்திற்குள் இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை படிப்படியாக வலுப்பெற்று வருகிறது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் நாளை அதிகாலை பனியுடனான வானிலை எதிர்பார்க்கப்படுகிறது