8 மாகாணங்களுக்கு மின்னல் எச்சரிக்கை
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல், வடக்கு, வடமத்திய மற்றும் தென் மாகாணங்களுக்கு பலத்த மின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவித்தல் விடுத்துள்ளது.
இன்று (08) முற்பகல் 11.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல் நாளை அதிகாலை 01.00 மணி வரை செல்லுபடியாகும்.

அதற்கமைய, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல், வடக்கு, வடமத்திய மற்றும் தென் மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளையில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யும் அதேவேளை, பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். எனவே மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் அசம்பாவிதங்களைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.