நாட்டின் பல பகுதிகளில் மின்னல் தாக்கம்; வளிமண்டலவியல் திணைக்களம்
நாட்டின் பல பகுதிகளில் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மேல், சபரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று கடுமையான மின்னல் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

. குறித்த எச்சரிக்கை இன்று இரவு 11.30 மணிவரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.