மிளகை தேனில் கலந்து சாப்பிட்டால் ஏற்படும் அதிசயம்!
பொதுவாக வயது அதிகமாக அதிகமாக நமது மூளையின் செல்கள் அழிய தொடங்குவதால் நமக்கு அதிகம் ஞாபக மறதி உண்டாகிறது .
அதனால் மூளைக்கு பலம் சேர்க்கும் சில வகையான உணவுகளை நாம் அடிக்கடி எடுத்து கொள்வது நலம் .
உதாரணமாக நட்ஸ் வகைகள் ,தானிய வகைகளை அதிகம் எடுத்து கொள்ளாமல் இருப்போருக்கு இந்த வயது மூப்பு காரணமாக மறதி நோய் உண்டாகும் என சொல்லப்படுகின்றது .
ஞாபக மறதி மாற சாப்பிடவேண்டிய உணவுகள்
1. தேனுடன் மிளகை கலந்து சாப்பிட்டு வந்தால் அதிகமாக மறந்து போவது குறைந்து நினைவாற்றல் அதிகரிக்குமாம்.
2.வல்லாரை மூலிகையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஞாபக மறதிக்கு நல்ல பலன் கிடைக்கும்.
3. வில்வப்பழத்தின் குழம்பு, சர்க்கரை ஆகியவற்றை வெண்ணெயுடன் சேர்த்து சாப்பிட்டால் அதிக மறதி ஏற்படுவது குறைந்து நினைவாற்றல் பெருகும் .
4.அதிக மறதி உள்ளோர் 10 முதல் 15 கருஞ்சீரக விதைகளை மென்று தின்று வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
5.வல்லாரை இலையின் பொடியை சீரகம், மஞ்சள் சேர்த்து, காலை, மாலை என இரண்டு முறை உணவுக்கு பின் சாப்பிட்டு,பசும்பால் அருந்த நினைவாற்றல் கடல் போல பெருகுமாம்.