தாய் பாலால் பறிபோன பச்சிளம் குழந்தையின் உயிர்
ஐந்தரை மாத ஆண் குழந்தை மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் மஸ்கெலியா க்ளென்டில் தோட்டத்தில் வசிக்கும் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழப்பு
இந்த நிலையில் கருத்து தெரிவித்த மஸ்கெலியா பிராந்திய வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் "அக் குழந்தை தாய்ப்பால் அருந்தும் போது தொண்டையில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு வரும் போதே ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக தெரிவித்துள்ளார்.
சில தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும்போது கவனக்குறைவாக நடந்துகொள்வதால் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதாகவும் தெரிவிதித்துள்ளார்.
அத்தோடு இதுபோன்ற சூழ்நிலைகளை தவிர்க்க அனைத்து தாய்மார்களும் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்" என்றும் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் உயிரிழந்த குழந்தையின் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை திக் ஓயா கிளங்கன் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.