யாழில் கட்டுத்துவக்கால் பறிபோன உயிர்
Jaffna
Sri Lanka Police Investigation
Death
By Sulokshi
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் கட்டுத் துவக்கு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொடிகாமம் பகுதியை சேர்ந்த தங்கவேலு மோகனச்சந்திரன் (வயது 34) என்பவரே உயிரிழந்துள்ளார்.
வேட்டைக்காக நேற்று (26) கட்டுத் துவக்குடன் சென்ற வேளை அது தவறுதலாக வெடித்தது.
இதில், படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US