ஜனாதிபதிக்கு சென்ற முக்கிய நபரின் இராஜினாமா கடிதம்!
அரசின் முக்கியஸ்தர் ஒருவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்வுக்கு தனது இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .
அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவரது கடிதத்தை ஜனாதிபதி ஏற்றாரா இல்லையா என்றும் தற்போது வரையில் எந்த தகவலும் வெளியாகவில்லை.
இந்த இராஜினாமாவானது உடல் நலக்குறைவு மற்றும் சில தனிப்பட்ட காரணத்திற்காக அவர் எடுத்துள்ளார் என கூறப்படுகிறது. வைத்தியர் பிரசன்ன குணசேன அவர்கள் புகழ்பெற்ற நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். அதோடு அவர் அரச மருந்தாக கூட்டுத்தாபனத்தின் தலைவராக இலங்கை அரசுக்கு பல சேவையை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
