சிறிதரனிற்கு புதிய நெருக்கடி! அடுத்து என்ன நடக்கும்?
சிறீதரன் எம்.பியும் விரைவில் தமிழரசுக் கட்சியில் இருந்து விலக்கப்படலாம். ஏன் இதை சொல்கிறேன் என்றால், கட்சியில் இருக்கும் சிலருக்கு சிறீதரன் எம்.பியின் தீவிர நிலைப்பாடும், தமிழ்த் தேசிய கொள்கைப்பிடிப்பும் கடும் அச்சத்தையும் எரிச்சலையும் கொடுக்கிறது. ஆதலால் அவர் விரைவில் திட்டமிட்டு வெளியேற்றப்படலாம். ஆனால் சிறீதரன் எம்.பி 3 தேர்தல்களிலும் வென்று எம்.பியாக வந்தவர் என முகநுால் பதிவு ஒன்றில் குறிப்பிடப் பட்டுள்ளது.
மேலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வடக்கு கிழக்கில் கட்சி சார்பில் கடைசி இரண்டு தடவையும் அதிகூடிய விருப்புவாக்கை பெற்றவர். மக்களின் மனதை வென்ற ஒரு அரசியல் தலைவன். அவரை வெளியேற்ற நினைப்பது சிறு விடயமில்லை என்பதை சிலர் புரிந்தால் சரி. ஐ.நாவுக்கு கடிதம் அனுப்பிய விவகாரம் தமிழரசுக் கட்சிக்குள் கடும் உள்முரண்பாட்டை ஏற்டுத்தியிருக்கிறது. உண்மையில் நடந்த விடயம் என்ன என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்துகிறோம் நீங்களே முடிவெடுங்கள்.
இந்த வருடம் 5ஆம் 17ஆம் திகதி தமிழரசுக் கட்சியின் சம்பந்தன் ஐயா, மாவை ஐயா (தலைவர்), Dr சத்தியலிங்கம் (பதில் செயலாளர்) , கௌரவ சுமந்திரன், கௌரவ சார்ள்ஸ், கௌரவ சாணக்கியன், கௌரவ கலையரசன் ஆகியோருக்கு சிறீதரன் எம்.பியிடம் இருந்து ஒரு கடிதம் அனுப்பப்பட்டது அதில் "ஐ.நாவுக்கு கடிதம் அனுப்ப வேண்டு அதற்குரிய தயார்ப்பாடுத்தல் வேலைகள் செய்ய வேண்டும்" என்று தெரிவித்து சிறீதரன் எம்.பியிடம் இருந்து 14 கோரிக்கைகள் / விடயபரப்புக்கள் உள்ளடக்கிய ஒரு கடிதம் அனைவருக்கும் அனுப்பப்பட்டது.
"உங்களது கடிதம் கிடைத்தது சிறீ" என்று சம்பந்தன் ஐயா சிறீதரன் எம்பிக்கு தொலைபேசியில் பதில் சொல்லியிருக்கிறார். ஆனால் அதில் குறிப்பிட்ட / கோரப்பட்ட விடயங்கள் தொடர்பில் யாராலும் எவ்வித முன்னேற்பாடுகளும் நடைபெறவில்லை. பாரளுமன்ற குழுக்கூட்டங்களிலும் மீண்டும் மீண்டும் ஜெனீவா விடயங்கள் கேட்கப்பட்ட போதும் அதற்கு மலுப்பலான பதில்களோடு தட்டிக்களிக்கப்பட்டன.
சிறீதரன் எம்.பி கடிதம் அனுப்பி சரியாக இரண்டரை மாதங்களுக்கு பின் செப்ரெம்பர் 3ஆம் திகதி ஒரு கடிதம் கௌரவ சுமந்திரன் அவர்களால் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டது.
குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில விடயங்களில் தமக்கு உடன்பாடு இல்லை என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரால் சொல்லப்பட்டது. ஆகவே குறித்த கடிதம் தொடர்பாக 5ஆம் திகதி மெய்நிகர் மூலம் கூடும் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவில் ஆராய்வோம் என காத்திருந்தார்கள். ஆனால் குறித்த கூட்டத்தில் கடிதம் பற்றி கேட்ட போது "அந்த கடிதத்தை சம்பந்தன் ஐயா மட்டும் கையெழுத்து வைத்து அனுப்பிவிட்டார்" என்று கௌரவ சுமந்திரன் அவர்களால் கூறப்பட்டிருக்கிறது.
இங்கு யார் கையெழுத்து வைத்து கடிதம் அனுப்பினார்கள் என்பது முக்கியமில்லை ஆனால் கட்சியில் இருக்கும் மற்றைய எம்பிக்கள் எவருடனும் கடித அமைப்பு / உள்ளடக்கம் தொடர்பாக எதுவித கலந்துரையாடலும் மேற்கொள்ளப்படவில்லை. தனிப்பட்ட முறையில் தாமே தீர்மானம் எடுத்து தனித்து கடிதத்தை அனுப்பிவிட்டார்.
பிறகு எதற்கு ஒரு கூட்டமைப்பு? ஏன் தலைவர் செயலாளர் போன்ற கட்டமைப்பு? இந்த தனிப்போக்கு ஏன்? இப்ப அதை சிறீதரன் எம்.பி வெளிய சொன்னா பலருக்கு எரியுது, புகையுது.
ஒரு இனத்தின் முக்கிய பிரச்சினை தொடர்பான விடயத்தில் ஒருவர் மட்டும் தனித்து முடிவுகளை எடுத்துவிட்டு மற்றவர்கள் அதற்கு சம்மதிக்க வேண்டும் அல்லது அடங்கி போக வேண்டும் என்றால் என்ன சர்வாதிகாரமாகவா கட்சி தலைமை செயற்படுகிறது? எதிர்த்து உள்ளே கேள்வி கேட்டால் பதில் சொல்ல மாட்டர்கள். அதையே பொது வெளியில் கேட்டால் எல்லாருக்கும் கோவம் வருகிறது என முகநுால் பதிவு ஒன்றில் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு கட்சி என்றால் தலைவர் என்றால் முதலில் உறுப்பினர்களை சமமான முறையில் மதித்து கூட்டினைக்க வேண்டும். அப்போது தான் எல்லோரும் கட்சி தலமைக்கு பணிவார்கள்/ கட்டுப்படுவார்கள், கட்சித் தலைமையும் ஒரு சிலரும் முடிவு எடுத்து வேலையை முடிப்பினம்.
பின்னர் வரும் விமர்சனங்களுக்கு மற்றையவர்கள் வெள்ளையடிக்க வேண்டும், இது எந்த வகை அரசியலோ தெரியவில்லை? இப்படியே சிறீதரன் எம்.பி தனது நிலைப்பாட்டில் உறுதியாக நிற்பாராக இருந்தால் அவர் விரைவில் தமிழரசுக் கட்சியில் இருந்து நீக்கப்படுவது மட்டும் உண்மை.
ஆனால் சிறீதரன் எம்.பியின் இந்த உறுதியான நிலைப்பாட்டையும் தமிழ்த் தேசிய கொள்கைப்பற்றையும் தான் மக்கள் பெரும்பான்மையாக விரும்புகிறார்கள்.
சிறீதரன் எம்.பி 3 தேர்தல்களிலும் வென்று எம்.பியாக வந்தவர். வடக்கு கிழக்கில் கட்சி சார்பில் கடைசி இரண்டு தடவையும் அதிகூடிய விருப்புவாக்கை பெற்றவர். மக்களின் மனதை வென்ற ஒரு அரசியல் தலைவன். அவரை வெளியேற்ற நினைப்பது சிறு விடயமில்லை என்பதை சிலர் புரிந்தால் சரி. எப்போதும் தடம் மாறாது தமிழ்த்தேசியத்தில் பயணிக்கும் எம் ஒரே அரசியல் தலைவன் சிவஞானம் சிறீதரன், ஆனால் இலங்கை அரசுக்கு சார்பாக தமிழரசுக் கட்சியை நகர்த, நினைப்பவர்களுக்கு முட்டுக் கட்டையாக கட்சிக்குள் பெரும் நெருக்கடியாக இருப்பவர் சிறிதரன் எனவே அவரை வெளியேற்றி விட்டால் தமிழரசுக் கட்சி அரசின் நிழலாக வெளிப்படையாக செயற்படும்.
தமிழரசுக் கட்சியில் இருவர் அமைச்சர் மற்றும் மாவட்ட அபிவருத்திக் குழு கனவுகளுடன் வாழ்பவர்கள் அவர்களிற்கு கொள்கை எல்லாம் சமூக வலைத் தளங்களில் கதைப்பதும், மகிந்த, கோட்டாபயவுன் திரை மறைவில் கதைப்பது மட்டுமே.
தமிழரரை டம்மி அரசாக மாற்ற துடிக்கும் அணி சிறிதரனை வெளியேற்றுரு என முகநுால் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.