அரசாங்கத்துக்கு எதிராக மீண்டும் வீதிக்கு இறங்குவோம்; முக்கியஸ்தர் எச்சரிக்கை!
நேற்று நாடாளுமன்ற மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 22ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்டம் தொடர்பில் இன்று “மாற்றத்திற்கான இளைஞர்கள்” அமைப்பின் தலைவர் லகிரு வீரசேகர தலைமையில் கொழும்பு பொரளை என். எம் பேரேரா மாவத்தையில் அமைந்திருக்கும் என்.எம்.பெரேரா மையத்தில் ஊடக சந்திப்பை நடத்தியிருந்தார்.
இந்த சந்திப்பில் குறித்த அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர் நேற்று கொண்டுவரப்பட்ட 22வது அரசியல் திருத்த சட்டம் 19வது திருத்த சட்டதோடு சம்மதப்பட்டது.
அதிலிருந்த சில விடயங்களை உட்புகுத்தி நாடாளுமன்றதில் இவர்கள் இவ்வாறான திட்டங்களை முன்னெடுக்கிறார்கள். இவர்களால் நாடாளுமன்றத்தில் அதிகாரத்தை பயன்படுத்தி சட்டத்தை நிறைவேற்றுக்கிறார்கள்.
நாடாளுமன்றதுக்கு வெளியில் மக்களுக்கு என்ன செய்கிறார்கள் என்று மக்களுக்கு தெரியாது. உணவு இல்லை. போராட்டகாரர்கள் அடக்கப்படுகின்றார்கள் சிறையில் தள்ளப்படுகின்றர்கள் இதை மட்டும் தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுக்கிறார்கள்.
இது தான் ஒவ்வொருநாளும் தொடர்கிறது. இதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் மக்கள் யோசனை இன்றி அனுமதி இன்றி இவ்வாறு நாடாளுமன்றம் செயற்பட முடியாது இதற்கு மக்கள் கட்டாயம் பாடம் புகுத்த வேண்டும். ஜனாதிபதி ரணில், கோட்டா, மஹிந்த மைத்திரி எல்லோருடைய திட்டமிட்ட சதிதான்.
இந்த 19வது 22வது சட்டங்கள். அரசியல் அமைப்புக்கும் அரசியல்வாதிக்கும் நன்மை தருமே தவிர நாட்டுக்கும் மக்களுக்கும் அல்ல இதற்கு ஒரே வழி “அரககல போராட்டத்தை தொடரவேண்டும்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களையும் நாட்டையும் பற்றி சிந்திப்பது இல்லை இவர்கள் 19,20,21.22 சட்டங்களுக்கு கை உயர்த்துவது. இதை தவிர வேறு ஒன்றும் இந்த அரசாங்கத்தால் செய்ய முடியாது மீண்டும் அனைவரும் வீதிக்கு இறங்குவோம் என்று லகிரு வீர சேகர ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.