உக்ரேன் கற்பிக்கும் பாடம்; பேச்சில் இருந்த வேகம் உதவிக்கு வருவதில் இல்லை!
1922 இல் உக்ரைனிய சோவியத் சோசலிசக் குடியரசாக உருவாகி சோவியத் ஒன்றியத்தின் நிறுவன உறுப்பினர் நாடாக இருந்ததே உக்ரேன்.
கொப்பர்சேவ் காலத்தில் , சோவியத் ஒன்றியம் 1991 இல் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, உக்ரைன் தனிநாடாக விடுதலை அடைந்தது. ரசியா மற்றும் உக்ரேனின் இராணுவ தொழில் நுட்பங்கள் கிட்டதட்ட ஒரே மாதிரியானவை.
எனவே இலகுவாக ரசியாவால் உக்ரேனிய இராணுவ தொழில் நுட்பங்களை செயலிழக்க வைத்து திடீர் தாக்குதலில் ஈடுபட முடிகிறது.
அத்தோடு உக்ரேனுக்குள் உள்ள பல பகுதிகள் தனிநாட்டு பிரிவினைவாத செயல்பாட்டில் இருந்தமையால் , ரசிய படையால் உள்ளே நுழைவது இலகுவாகிறது.
உக்ரைன் தலைநகர் கீவ் நகரிலுள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவுத்துறை தலைமையகம் மீது ரஷிய படை தாக்குதல் நடத்தி உள்ளது. தாக்குதல்கள் ரசியாவுக்குள் நடக்கவில்லை. உக்ரேனுக்குள் நடக்கிறது.
உக்ரேனும் மிக சிறிய நாடல்ல. உக்ரேன் , ரசிய படைகளை தாக்க முற்பட்டால் அவர்கள் மேல் உள்ள அனுதாபம் இல்லாமல் போகலாம். உலக நாடுகளது ஆதரவையும் இழக்க நேரிடலாம்.
அத்தோடு உக்ரேனிய மக்களுக்கு இழப்புகள் அதிகரிக்கலாம். ரசியா , ஓரளவு தாக்குதலை தொடுத்து அவர்களுக்கு ஆதரவான பகுதிகளை பெற்றுக் கொண்டு , தாக்குதலை நிறுத்தலாம்.
அமெரிக்க - ஐரோப்பிய - நேட்டோ படை ஆதரவு கிடைக்கும் என நம்பிய உக்ரேன் , ஏமாற்றம் அடைந்துள்ளது என தோன்றுகிறது.
பேச்சில் இருந்த வேகம் உதவிக்கு வருவதில் இல்லை.
இவை எல்லோருக்கும் ஒரு நல்ல பாடம் என ஜீவன் பிரசாத் என்பவ முகநூலில் பதிவிட்டுள்ளார்.