12 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரகசிய கலந்துரையாடல்
முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் 12 அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகளுக்கு இடையிலான இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாரஹேன்பிட்டி கிருள வீதியிலுள்ள முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
அரசாங்கத்தின் செயற்பாடுகள், தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள், அமெரிக்க வரி விதிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், தயாசிறி ஜயசேகர, ரிஷாட் பதியுதீன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரமேஷ் பத்திரன, ஷெஹான் சேமசிங்க, லசந்த அழகியவன்ன, மயந்த திஸாநாயக்க, அனுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த, பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.