யாழ் மக்களை ஆட்டிப்படைத்தவருக்கு நேர்ந்த கதி ; நீதிமன்றம் உத்தரவு!
யாழ்ப்பாணத்தில் இயங்கிய பிரபல வன்முறை கும்பலின் தலைவர் என கூறப்படும் நபருக்கு, யாழ் நீதவான் நீதிமன்று சிறைத்தண்டனை விதித்துள்ளது.
குறித்த வன்முறை கும்பல் ஒன்றின் தலைவர் என கூறப்படும் நபரை, வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பொலிஸார் தேடி வந்த நிலையில், கடந்த 2022ஆம் உரும்பிராய் பகுதியில் மறைந்திருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது.
நீதிமன்றம் உத்தரவு
தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்த போது, கூரிய ஆயுதங்களை காட்டி பொலிஸாரை அச்சுறுத்தி விட்டு தப்பி சென்றார்.
இதனையடுத்து சம்பவம் நொடர்பில் பொலிஸார் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்த நிலையில், சிறிது காலத்தில் அந்நபரையும் கைது செய்து மன்றில் முற்படுத்தி வழக்கு விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
அந்நிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம்(11) தீர்ப்புக்காக திகதியிடப்பட்டருந்த நிலையில், வழக்கு மன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போது, சந்தேக நபர் மீதான குற்றச்சாட்டில் ஒன்றிற்கு 3 மாத கால கட்டாய சிறைத்தண்டனை விதித்த மன்று ஏனைய குற்றச்சாட்டுகளுக்கு, 2 வருடம் , 4 மாத சிறைதண்டனை விதித்து, அதனை 10 வருட காலத்திற்கு ஒத்தி வைத்து தீர்ப்பளித்துள்ளது.