தொழிற்சங்க போராட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவித்த முக்கிய கட்சி!
சமீப காலமாக அரசின் முறையற்ற வரி கொள்ளை, அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட பொது காரணிகளை முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப்படும் தொழிற்சங்க போராட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக இடதுசாரி ஜனநாயக மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளை அமுல்படுத்தினால் சமூக கட்டமைப்பில் போராட்டங்கள் மாத்திரமே மிகுதியாகும் என இடதுசாரி ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார (Vasudeva Nanayakkara) தெரிவித்துள்ளார்.
நாட்டில் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தன்னிச்சையாக செயற்படுத்துவதை விடுத்து, தொழிற்சங்கத்தினருடன் இணக்கமாக செயற்பட வேண்டும் என்றும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.