யாழில் நுளம்புக்கு புகைப் போட்டுக் கொண்டிருந்த நபருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!
யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் நுளம்பை விரட்ட புகைப் போட்ட முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் நேற்றைய தினம் (26-12-2023) கே.கே.எஸ் பிரதான வீதி, மல்லாகம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேலும் குறித்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 75 வயதான சின்னத்துரை செல்வநாயகம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த 19ஆம் திகதி குறித்த முதியவர் மண்ணெண்ணெய் ஊற்றி நுளம்புக்கு புகைப் போட்டுக் கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக அவரது உடையில் தீப்பற்றியது.
இந்த நிலையில் அவர் உடனடியாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இவ்வாறான நிலையில் அவர் நேற்றையதினம் (26) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் இன்றையதினம் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.