கதிர்காம ஆலயத்தின் பிரதம பூசகர் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்!
கதிர்காம ஆலயத்தில் பூஜை செய்யப்படும் தங்கம் ஆலய பூசகருக்கு சொந்தமானது எனவும் அதனால் தான் தனக்கு வழங்கப்பட்ட தங்க தட்டை எடுத்துக்கொண்டதாகவும் ஆலயத்தின் பிரதம பூசகர் டி. ரத்நாயக்க கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் விசாரணை அதிகாரிகளிடம் அவர் இவ்வாறு கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக காணாமல் போயிருந்த கதிர்காமம் ஆலயத்தின் பிரதம பூசகர் சோமிபால டி. ரத்நாயக்க இன்றைய தினம் (27-12-2023) காலை 7.30 மணியளவில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் சரணடைந்தார்.
இதன்போது, சந்தேகநபரான பூசகர் கைது செய்யப்பட்டு சுமார் ஒன்றரை மணித்தியாலம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.
பின்னர், சந்தேகநபரான பூசகர் திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.