பெரும்வெற்றிகள் கொண்டு வரும் ஆபத்து; ஜனாதிபதியை எச்சரிக்கும் சட்டத்தரணி!

Anura Kumara Dissanayaka Government Of Sri Lanka General Election 2024 Parliament Election 2024
By Sulokshi Nov 15, 2024 04:52 AM GMT
Report

   நேற்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தி பெரும் வெற்றிபெற்றுள்ள நிலையில், நாடாளுமற தேர்தலில் பெரும்வெற்றிகள் கொண்டு வரும் ஆபத்துக்கள் குறித்து ஜனாதிபதி எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறும் நிலையில் உள்ளது என்பது புலனாகின்றது அல்லது அந்த கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மிக அருகில் நெருங்கிச்செல்லலாம்.

பெரும்வெற்றிகள் கொண்டு வரும் ஆபத்து; ஜனாதிபதியை எச்சரிக்கும் சட்டத்தரணி! | Lawyer Warns The President Dangers Of Big Wins

பெரும்வெற்றிகளுடன் வரும் ஆபத்துக்கள்

தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றால் விகிதாச்சார பிரதிநிதித்து முறையின் கீழ் ஒரு கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றமை இதுவே முதல்தடவை.

யாழ்ப்பாணத்தில் வரலாற்று திருப்புமுனை; வெற்றிவாகை சூடிய ஜனாதிபதி அனுர!

யாழ்ப்பாணத்தில் வரலாற்று திருப்புமுனை; வெற்றிவாகை சூடிய ஜனாதிபதி அனுர!

2010 இல் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் மூன்றில் இரண்டை நோக்கி நெருங்கிச்சென்றது,2020 இல் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவும் மூன்றில் இரண்டை நெருங்கிச் சென்றது மூன்றில் இரண்டை பெறுவதற்கு சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெறவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

பெரும்வெற்றிகள் கொண்டு வரும் ஆபத்து; ஜனாதிபதியை எச்சரிக்கும் சட்டத்தரணி! | Lawyer Warns The President Dangers Of Big Wins

1994 இல் சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட வெற்றியை மாத்திரம் இந்த வெற்றியுடன் சமாந்திரம் வரையமுடியும். தேசிய மக்கள் சக்தி வடக்குகிழக்கில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றுள்ளதால் இலங்கையின் பல்வேறு சமூகங்களை ஐக்கியப்படுத்தும் தலைவராக ஜனாதிபதி விளங்க முடியும்.

இந்த தேர்தல் வெற்றி நிறைவேற்றதிகார முறையை நீக்குவேன் என்ற தனது வாக்குறுதியை ஜனாதிபதி விரைவில் நீக்குவதற்கு உதவும்.

ஜனாதிபதியாக அனுரகுமாரதிசநாயக்க தெரிவுசெய்யப்பட்ட பின்னர் நாடு சென்றுகொண்டிருக்கின்ற பாதை குறித்து அனேக இலங்கையர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்,

தேசியப்பட்டியலை பெறுவதில் சுமந்திரன் - வைத்தியர் இடையே போட்டி!

தேசியப்பட்டியலை பெறுவதில் சுமந்திரன் - வைத்தியர் இடையே போட்டி!

குறிப்பாக அரசியல் கலாச்சாரத்தின் மாற்றம் குறித்து மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்பதற்கு சான்றாக இந்த வெற்றி காணப்படுகின்றது. எனினும் பெரும்வெற்றிகளுடன் வரும் ஆபத்துக்கள்குறித்து ஜனாதிபதி எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

ஜனாதிபதியே நேற்று தெரிவித்தது போன்று அரசியல் சக்திகள் கடந்த காலங்களில் மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறுவதற்கான சட்டங்களை இயற்றுவதற்காக மூன்றில்இரண்டு பெரும்பான்மைகளை பயன்படுத்தியிருந்தன.

ஜனநாயக உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை சிதைக்கும் சட்டங்களை இயற்றுவதற்கான உந்துதல்களை தேசிய மக்கள் சக்தி தவிர்க்கவேண்டும் எனவும்  இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்..

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US