திடீரென கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்ட சந்திப்பு
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கும் இடையிலான சந்திப்பு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பானது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெறவிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பு நேற்று (25) மாலை 4 மணிக்கு முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடத்த திட்டமிடப்பட்டது.
சர்ச்சைக்குரிய யுகதானவி ஒப்பந்தம் குறித்து அங்கு விவாதிக்கப்பட இருந்தது.
எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சந்திப்பில் கலந்துகொள்ள முடியாததால், கடைசி நேரத்தில் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாக அறியப்படுகிறது.