லண்டனில் பொலிஸார் திடீர் சோதனையில் சிக்கிய £4 மில்லியன் பணம்
லண்டனில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனையில் பெருமளவான ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
லண்டனின் கேட்ஃபோர்டில் ( Catford ) வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை செய்த பொலிஸார் அதில் இருந்து 35000 பவுண்ஸ் பணத்தை கைப்பற்றியுள்ளனர் .
சம்பவம் தொடர்பில் 54 வயதுடைய சாரதி கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேநேரம் சாரதியுடன் தொடர்புடைய குடியிருப்பொன்றும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து இரு படுக்கையறைகளில் சொப்பிங் பைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் £4 மில்லியன் ரொக்கப் பணம் கண்டுப்பிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
, மேலும் 01 கிலோ கொக்கைன் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதிகாரிகள் இதுவரை கண்டிராத மிகப்பெரிய ரொக்கப் பறிமுதல்களில் இதுவும் ஒன்று எனவும் மெட்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.