பாரிய அளவில் கஞ்சா பயிர்ச்செய்கை ; முற்றுகையிட்ட பாதுகாப்புப் படை
இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்து, பதுளை - ஹப்புத்தளை ஹல்துமுல்ல பகுதியில் பாரிய அளவிலான கஞ்சா பயிர்ச்செய்கையை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இராணுவத்தின் நேரடித் தலையீட்டுடன், பண்டாரவளை பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் ஒருங்கிணைப்பில் இந்த விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இரகசிய சோதனை
அலுத்வெல காப்புக்காடு மற்றும் உனகந்த காப்புக்காடு ஆகிய அடர்ந்த வனப்பகுதிகளை இலக்கு வைத்து இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டன.
சுமார் 6 ஏக்கர் நிலப்பரப்பில் மிக இரகசியமான முறையில் இந்த பயிர்ச்செய்கை முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது.
அங்கு சுமார் 320,000க்கும் அதிகமான முதிர்ச்சியடைந்த கஞ்சா செடிகள் பாதுகாப்புப் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வனப்பகுதிகளுக்குள் இவ்வளவு பாரிய அளவில் பயிர்ச்செய்கையை முன்னெடுத்து வந்த நபர்கள் மற்றும் இதன் பின்னணியில் உள்ள கடத்தல்காரர்களை கண்டறியும் பணியில் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.