நடிகர் கமலஹாசன்போல இலங்கை ஜனாதிபதி மாளிகைகள் ; ஒப்பிட்ட அனுர
நடிகர் கமலஹாசனின் தசாவதாரம் படத்தில் போன்று எமது நாட்டு ஜனாதிபதிகள் ஒவ்வொரு உருவத்தில் இருப்பதற்கு தேவையான முறையில் ஜனாதிபதி மாளிகைகள் இருக்கின்றன என ஜனாதிபதி அனுர குமார தெரிவித்தார்.
யாழ்.வல்வெட்டித்துறையில் நேற்று (31) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது ஜனாதிபதி மேலும் கூறுகையில்,
ஜனாதிபதி மாளிகை எனக்கு தேவையில்லை
யாழ்ப்பாணம் காங்கேசன்துறையின் மயிலிட்டி துறையில் இருக்கும் ஜனாதிபதி மாளிகை எனக்கு தேவையில்லை. அதனை பயன்படுத்த பொருத்தமான ஒரு வேலைத்திட்டத்தை தெரிவிக்குமறு ஆளுநர் மற்றும் மாவட்ட செயலாளருக்கு தெரிவித்திருக்கிறேன்.
அந்த ஜனாதிபதி மாளிகையை பல்கவைக்கழகம், கலாசார நிலையம் அமைப்பதற்கு பொருத்தம் என்றால் அதற்கு அதனை பயன்படுத்த வங்குவதற்கு நான் தயார்.
அதேபோன்று நுவரெலியா, அனுராதபுரம், கதிர்காமம் மஹியங்கனை ஆகிய இடங்களில் இருக்கும் ஜனாதிபதி மாளிகைகளையும் வழங்க தயாராக இருக்கிறேன்.
ஏனெனில் நாங்கள் வறுமையான நாட்டில் இருக்கிறோம். மக்களும் வறுமையில் இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் நாட்டின் தலைவர் தசாவதாரமாக செயற்படுகிறார்.
அவ்வாறு இருக்க முடியாது. அந்த அரசியல் மாறவேண்டும். அந்ந அரசியலை நாங்கள் மாற்றி இருக்கிறோம் என்றும் ஜனாதிபதி அனுர குமார கூறினார்.