காலியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றிய ஜாப்னா! துடுப்பாட்டத்தில் அதிரடி காட்டிய அவிஷ்கா
இலங்கையில் இன்று இடம்பெற்ற 2021 லங்கா பிரிமியர் லீக் இறுதி போட்டியில் காலி கிளாடியேட்டர்ஸ் வீழ்த்தி ஜாப்னா கிங் அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது.
2021 லங்கா பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஜாப்னா கிங்ஸ் மற்றும் காலி கிளடியேட்டர்ஸ் அணிகள் இன்று (23-12-2021) பலப்பரீட்சை மேற்கொண்டனர்.
பானுக ராஜபக்ஷ தலைமையில் காலி கிளாடியேட்டர்ஸ் அணியும், திசர பெரேரா தலைமையில் ஜாப்னா கிங்ஸ் அணியும் இறுதிப்போட்டியில் மோதின. இறுதிப்போட்டியானது ஹம்பாந்தோட்டை, சூரியவெவ மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜாப்னா அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது, இந்நிலையில் முதலில் களமிறங்கிய ஜாப்னா அணியின் தொடங்க வீரர்கள் அவிஷ்கா பெர்னாண்டோ மற்றும் ரகுமானுல்லா குர்பாஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் எண்ணிக்கையை ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே உயர்ந்துக்கொண்டு சென்றனர்.
6 ஓவரின் போது சமித் பட்டேல் வீசிய பந்தில் குசல் மெண்டிஸிடம் கேட்ச் கொடுத்து 35 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய Kohler-Cadmore மற்றும் அவிஷ்கா பெர்ணாண்டோ ஜோடி சேர்ந்து அணியின் எண்ணிக்கையை மீண்டும் உயர்ந்த தொடங்கியனர். 12 ஓவரின் போது அவிஷ்கா பெர்னாண்டோ நுவன் துஷாரா வீசிய பந்தில் தனுஷ்க குணதிலக்கவிடம் கேட்ச் கொடுத்து 63 ஓட்டங்களுக்கு வெளியேறினார்.

பின்னர் Kohler-Cadmore அவர் பங்கிற்கு 57 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இறுதி வரைக்கும் களத்திலி இருந்தார். இந்நிலையில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஜாப்னா அணி 201 ஓட்டங்களை குவிந்தது. ஜாப்னா அணி சார்பில் அவிஷ்கா பெர்னாண்டோ 41 பந்துகளில் 63 ஓட்டங்களையும், Kohler-Cadmore 41 பந்துகளில் 57 ஓட்டங்களை பெற்றனர். காலி அணி சார்பில் அமீர் 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

பின்னர் 202 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலங்குடன் களமிறங்கிய காலி கிளாடியேட்டர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் குசல் மெண்டிஸ் மற்றும் தனுஷ்க குணதிலக்க அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அணியின் எண்ணிக்கை 63 இருக்கும் போது தனுஷ்க குணதிலக்க வனிந்து ஹாசரங்க பந்தில் வீழ்ச்சியில் திசாரா பெரேராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய பென் டக் ஓட்டங்கள் எதும் எடுக்காமல் ஆட்டமிழக்க அடுத்தடுத்து வந்த வீரர்கள் வந்த வேகத்தில் பவுலியன் திரும்பினர். குசல் மெண்டிஸ் 39 ஓட்டங்கள் இருந்த போது ரன் ஆடாகி ஆட்டமிழந்தார்.

போட்டியில் இறுதியாக காலி கிளேடியட்டர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 178 ஓட்டங்கள் எடுத்து, 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த வெற்றியின் மூலம் ஜாப்னா கிங்ஸ் அணி 2021-ஆம் ஆண்டிற்கான சாம்பியன் என்ற சாதனையை படைத்துள்ளது.
காலி கிளேடியட்டர்ஸ் அணி சார்பில் தனுஷ்க குணதிலக்க 21 பந்துகளில் 54 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 28 பந்துகளில் 39 ஓட்டங்களை எடுத்தனர். ஜாப்னா கிங்ஸ் அணி சார்பில் வனிந்து அசரங்கா மற்றும் சதுரங்க டி சில்வா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.
.